ஒரு நாட்டின் மனித வளத்தை மேம்படுத்தும் மிக முக்கியமான செயலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் பணி மிகவும் மகத்தானது. எவ்வளவு மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் .... சொல்லிக்கொண்டே போகலாம்.
இருப்பினும், இங்கே ஆசிரியர்களின் திறன் குறித்த ஆழ்ந்த பார்வை மிக அவசியமாகிறது. ஏனென்றால் மாணவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் அவர்கள்தான். இங்கே ஆசிரியர்களின் ஆளுமை மாணவர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது, பழக்க வழக்கங்கள் மாணவர்களால் தொடரப்படுகிறது. ஆகவே இங்கே ஆசிரியர்களின் உளவியல் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு கல்வி நிறுவனங்களுக்கு அவசியமாகிறது.
கல்வி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சில குறிப்புகள்,
ஒரு கல்வி நிறுவனத்தில் பணிபுரியம் ஆசிரியர், மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் செயல் திட்டங்களை அமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களின் அறிவு வளத்தையும், செயல் திறனையும் அவரால் இனம் காண முடியும்.
முதலில் ஒரு ஆசிரியர் தனது பலத்தையும் பலவீனத்தையும் பகுத்தாராயும் மனப்பக்குவம் நிறைந்தவராக இருக்கவேண்டும், அப்பொழுதுதான் மாணவர்களின் சூழ்நிலையை ஆராய்ந்து உணர முடியும்.
அதேபோல் உங்களது ஆசிரியர்களின் திறமையையும் நீங்கள் மதிக்க தவறுதல் கூடாது.
எப்பொழுதும் உங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு, பலவிதமான கட்டுத் திட்டங்களை விதிக்காதீர்கள்.

பொருளாதார நிபுணர்களை உருவாக்குவது, அரசியல் அறிஞர்களை உருவாக்குவது இப்படி ஏதாவது புரட்சிகரமான ஒரு குறிக்கோள். நமது நாட்டையும், பொருளாதாரத்தையும், விவசாயத்தையும், அறிவையும், வளத்தையும் பெருக்கும் குறிக்கோள்.
![]() |
| நம்ம நாடே உங்கள நம்பித்தான் இருக்கு ! |
ஆலோசித்துசெயல்படுத்தும்திட்டங்களை முழு ஒத்துழைப்புடன் நிறைவேற்ற தயாராக இருக்கிறார்கள் என்பதே உண்மை.
![]() |
| கட்டளை வேண்டாமே ! |
ஒரு ஆசிரியரிடம் ஒரு பொறுப்பை கொடுத்து, அவர் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள் என்றால், உங்களது எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் தனது முழுத்திறமையயும் அவர் வெளிப்படுத்துவார்.
யாருக்கு எந்த வேலையில் விருப்பமும் ஈடுபாடும் உள்ளதோ அந்த வேலையை அவர்களிடம் ஒப்படைப்பதுதான் சிறந்தது.
ஒரு ஆசிரியரால் கல்வி நிறுவனத்திற்கும், மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் தாவு தாட்சண்யம் பார்க்காமல் அவரை பணியிலிருந்து நீக்கிவிடுங்கள். ஒரு கணம் தாமதித்தாலும் மிகப்பெரிய இழுக்கை நீங்கள் சந்திக்க வேண்டிவரும் .
உங்களது பணியாளர்களிடம் மட்டமான பேச்சையோ, வார்த்தை ஜாலங்களையோ வெளிப்படுத்ததீர்கள் அது ஏற்புடையதல்ல.
உங்களது பணியாளர்களிடம் வெறும் லாப நட்ட கணக்கை மட்டும் காட்டுவதை தவிர்த்துவிட்டு, உங்களது கல்வி நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோளை தெரியப்படுத்துங்கள்.
பழைய கல்வி முறைகளை மட்டுமே கடை பிடிக்காதீர்கள்
![]() |
| புதுசாதான் யோசிப்போமே ! |
மாறாக நவீன யுத்திகளை கையாளுங்கள்.
உங்களது பணியாளர்கள் திறமையானவர்களாக இருந்தால், பணி தொடர்பான அறிக்கைகளை தாமாகவே முன்வந்து சமர்ப்பிப்பார்கள்.
சில பணியாளர்கள் தங்களது விருப்பம்போல் நடந்துகொள்வார்கள், அவர்களை கவனிக்க தவறாதீர்கள். பெரும்பாலும் அவர்களது அணுகுமுறை தவறானதாக இருக்கக்கூடும்.
மாணவர்களின் புகார்களை எப்பொழுதும் அலட்சியப்படுத்தாதீர்கள், ஆராயுங்கள்.
உங்களது பணியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்காதீர்கள், அவர்களின் பலவீனம் மட்டுமே வெளிப்பட அது ஏதுவாகிவிடும்.
நீங்கள் பொறுப்பானவராக இருந்தால் உங்களது பணியாளர்களும், மாணவர்களும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் நீங்கள்தானே அவர்களுக்கு முன்மாதிரி.
உங்களது கல்வி நிறுவனம் வளர வாழ்த்துக்கள்!










super
ReplyDeleteநன்றி ரத்னம் அவர்களே !
ReplyDelete